Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

UN தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் :: வடமாகாண ஆளுநர் சந்திப்பு!

May 31 2019 , Written by lankatime

UN தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ::  வடமாகாண ஆளுநர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் Ms Jean Gough மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் Mr. Tim Sutton ஆகியோர் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Read more

சஹ்ரான் உடைய மடிகணினி-வீடொன்றில் இருந்து 3,500,000/- பணம் மீட்பு! Photos

May 31 2019 , Written by lankatime

சஹ்ரான் உடைய  மடிகணினி-வீடொன்றில் இருந்து 3,500,000/- பணம் மீட்பு! Photos
சஹ்ரான் உடைய  மடிகணினி-வீடொன்றில் இருந்து 3,500,000/- பணம் மீட்பு! Photosசஹ்ரான் உடைய  மடிகணினி-வீடொன்றில் இருந்து 3,500,000/- பணம் மீட்பு! Photos
சஹ்ரான் உடைய  மடிகணினி-வீடொன்றில் இருந்து 3,500,000/- பணம் மீட்பு! Photosசஹ்ரான் உடைய  மடிகணினி-வீடொன்றில் இருந்து 3,500,000/- பணம் மீட்பு! Photos
சஹ்ரான் உடையது என சந்தேகிக்கப்படும், மடிகணினி ஒன்று அக்கறைப்பற்று - பாலமுனை களப்பிலும், சாலமுனையில் உள்ள வீடொன்றில் இருந்து 3,500,000/- பணமும் மீட்பு-பொலிஸ் பேச்சாளர்
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள கலப்பு ஒன்றில் இருந்து அது மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.இதேவேளை சாலமுனை பிரதேசத்தில் வைத்து 35 லட்சம் ரூபாய் பணத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
Read more

ஹம்பாந்தோட்டையில் புத்தர் சிலைகள் உடைப்பு!

May 31 2019 , Written by lankatime

ஹம்பாந்தோட்டையில் புத்தர் சிலைகள் உடைப்பு!

ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சிலை உடைப்பு யாரால் எந்த காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரதேசத்திற்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







Read more

பொத்துவிலில் சிக்கிய போதைவஸ்து வியாபாரிகள்!

May 31 2019 , Written by lankatime

பொத்துவிலில் சிக்கிய போதைவஸ்து வியாபாரிகள்!

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் நேற்று அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்களம் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின்போது கஞ்சா மற்றும் ஹெரோயின் வைத்திருந்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

கல்முனை மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் அம்பாறை மதுவரித்திணைக்களமும் இணைந்து இந்த திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.இதன்போது மூன்று பேரிடம் இருந்து 130மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் ஏனைய நால்வரிடம் இருந்து கேரளா கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார்.

Read more

யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தினரால் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக போராட்டம்!

May 31 2019 , Written by lankatime

யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தினரால் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக போராட்டம்!
யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தினரால் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக போராட்டம்!
Read more

பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து பேச்சுவார்த்தை!

May 31 2019 , Written by lankatime

பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து பேச்சுவார்த்தை!
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் டெல்லி சென்றிருந்தனர்.

அவர்கள் முன்னதாக நேற்று இரவு பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஜுன் மாதம் 9ம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று அமைச்சர் ரவு.ஃப் ஹக்கீம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Read more

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!

May 31 2019 , Written by lankatime

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்கும் வரையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
Read more

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது!

May 31 2019 , Written by lankatime

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது!

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

சாதாரண சேவையில் 3500 ரூபாவை செலுத்தியும் ஒரு நாள் சேவையில் 15 ஆயிரம் ரூபாவை செலுத்தியும் கடவுச் சீட்டு பெறலாமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!

May 31 2019 , Written by lankatime

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!
டீ.ஏ ராஜபக்ஷ நினைவக நூதனசாலை நிர்மாணப்பணியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பான வழக்கு, நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனு அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதியர்சர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதற்கமைய அந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ ராஜபக்ஷ நினைவக நூதனசாலை நிர்மாண பணியின் போது, 33.9 மில்லியன் ரூபா அரச நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Read more
1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 60 > >>