Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

நாட்டை சீரழித்த UNP கட்சியினரை நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள் மஹிந்த!

June 30 2019 , Written by lankatime

நாட்டை  சீரழித்த UNP கட்சியினரை நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள் மஹிந்த!
Read more

இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

June 30 2019 , Written by lankatime

இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு செல்லும் பௌத்த சுற்றுலா பயணிகளுக்கு அங்குள்ள பௌத்த புனித ஸ்லங்களை பார்வையிட வசதிகள் செய்து கொடுப்பதற்கும், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வரும் பௌத்த சுற்றுலாப் பயணிகளுக்கு இங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை பார்வையிட வசதிகள் செய்து கொண்டுப்பதும் இந்த ஒப்பந்தில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார். 

Read more

19 ஆம் திருத்தச் சட்டத்தினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: சம்பிக்க!

June 30 2019 , Written by lankatime

19 ஆம் திருத்தச் சட்டத்தினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: சம்பிக்க!

நாட்டில் தற்பொழுது ஜனாதிபதி முறைமைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் சமநிலைத் தன்மையொன்று காணப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனிதப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களை காண்பதற்கான விஜயத்தின் போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் ஜனநாயகத் தன்மை அதிகரித்து, மனித உரிமைகளுக்காக பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியிடம் இருந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதன் ஊடாக, அது நாட்டில் சிறந்த முறையில் பிரயோகிக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகளை நாட்டில் இல்லாமல் செய்யும் வரையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கக் கூடாது என்ற கருத்தில் உறுதியாகவுள்ள பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க, தற்பொழுது ஏற்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு தொடர்பில் தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 18 ஆம் 19 ஆம் திருத்தச் சட்டங்களை நீக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ 19 ஆவது திருத்தச் சட்டம்தான் பிரச்சினை எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Read more

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விஷேட சுற்றி வளைப்பு!

June 30 2019 , Written by lankatime

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விஷேட சுற்றி வளைப்பு!

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விஷேட சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்க மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மதுபான விநியோக அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறுகின்ற மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் 0112 045 077 அல்லது 0112 045 078 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு மதுவரி திணைக்களம் கோரியுள்ளது.

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு !

June 30 2019 , Written by lankatime

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு !

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களினால் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் 238மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த 33 பிள்ளைகளை பராமரிக்க 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு வைத்திய அறிக்கைகளின் பிரகாரம் மேலும் இழப்பீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதலிகளினால் முற்றாக சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நேற்று(29) காலை பிரதமர் ரணில் விக்ரசிங்க விஜயம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்

காயமடைந்தவர்களுக்கு வைத்திய அறிக்கைகளின் பிரகாரம் மேலும் இழப்பீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மரணமான 189 பேருக்கு 185 மில்லின் ரூபாயும் காயமடைந்த 403 பேருக்கு 53 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையும்; இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்-எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு முன்னர் சீயோன் தேவாலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இவ்விஜயத்தில் ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.சசிகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Read more

தயாசிறிக்கு மீண்டும் தெரிவுக்குழு அழைப்பு!

June 30 2019 , Written by lankatime

தயாசிறிக்கு மீண்டும் தெரிவுக்குழு அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக, அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு மீண்டும் அறிவிக்கவுள்ளதாக, இக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக, தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் யாரென்பது தனக்குத் தெரியுமென, தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமைத் தொடர்பில் விசாரணை செய்யவே, தயாசிறி அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த குமாரிசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகவில்லை எனவே, மீண்டும் ​அறிவிக்கபடும் போது, அவர் முன்னிலையாகவிட்டால், அவருக்கு எதிராக, நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more

மலர்மொட்டிலிருந்து துரத்தப்படும் குமார வெல்கம!

June 30 2019 , Written by lankatime

மலர்மொட்டிலிருந்து துரத்தப்படும் குமார வெல்கம!

குமார வெல்கம பதுளை தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று பதுளையில் நடைபெற்ற பொதுஜன முன்னணி கூட்டத்தின் போது குமார வெல்கம தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, குமார வெல்கமவிற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் தெனுக்க விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

குமார வெல்கம, கோதபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதனை எதிர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

June 29 2019 , Written by lankatime

புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து நிலக்கீழ் வெடிபொருட்கள் உள்ளடங்கிய பொதி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

25 நிலக்கீழ் வெடிபொருட்கள் குறித்த பொதியில் இருந்ததாகவும் குறித்த பொதிக்கு அருகில் ஆர்.பி.ஜி தோட்ட ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குறித்த வெடிபொருட்களை செயலிழக்க செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்ரீரீஈ அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இவ்வாறு கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஜம்முவில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு மசோதா நிறைவேற்றம்!

June 29 2019 , Written by lankatime

ஜம்முவில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு மசோதா நிறைவேற்றம்!

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூனில், இந்த கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இங்கு, லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலையும் நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
ஆனால், மார்ச்சில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின், சட்டம் - ஒழுங்கு நிலை கருதி, சட்டசபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக, ஜம்மு - காஷ்மீர் சென்றார். அங்கு, கவர்னர் உட்பட, உளவு மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்தார்.பின், டில்லி திரும்பிய அவர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை மேலும், ஆறு மாதங்கள் நீட்டிக்கும் மசோதாவை, லோக்சபாவில், நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து, மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், நரேந்திரமோடி அரசு செய்து வருகிறது. இங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, 2,307 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு, இந்தியாவுடன் இல்லை.

இம்மாநிலத்தில், இதுவரை, 132 முறை ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு தான், அச்சுறுத்தல்கள் உள்ளன.இம்மாநிலத்தில், தேர்தல்கள் நடக்கும் போதெல்லாம் ரத்த ஆறு ஓடுவதையே நாம் பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல், வன்முறை சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியாக நடந்தது.இங்கு, ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் நடத்தப்படாத காலமெல்லாம் இருந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, உறுப்பினர்களின் ஆதரவுடன், இந்த மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.

Read more
1 2 3 4 5 6 7 8 9 10 20 30 > >>