Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

ஆப்கன் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 28 தலிபான்கள் பலி!

July 22 2019 , Written by lankatime

ஆப்கன் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 28 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் தீவிரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதாக ராணுவஅதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தெரிவித்தனர்.

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்த விவரம்:

ராணுவத்திற்கு கிடைத்த நம்பகமான ஒரு ரகசிய குறிப்பின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த ஏ 26 விமானம் நேற்று மாலை ஃபரியாப் மாகாணம் நோக்கிச் சென்றது. அங்கு பில்சிராக் மாவட்டத்தில் தலிபான்களின் மறைவிடம் ஒன்றை கண்டுபிடித்து குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில்ஆயுதமேந்திய 28 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தபோதுதான் இந்த வான்வழித் தாக்குதல் நடந்துள்ளது என்று  ''209 ஷாஹீன்'' பிராந்தியத்தை தலைமையிடமாகக் கொண்ட ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Read more

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

July 18 2019 , Written by lankatime

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

 ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதது. 7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் நளினி மனு அளித்தார். நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Read more

ஒக்டோபர் 15 இற்குள் மாகாணசபைத் தேர்தல்!

July 16 2019 , Written by lankatime

ஒக்டோபர் 15 இற்குள் மாகாணசபைத் தேர்தல்!

சில குறிப்பிட்ட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால், மாகாண சபைத் தேர்தல்களை ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் ஊடக ஆசிரியர்கள் பேரவையின் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு  மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியுமா என்று உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கோருமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றம் இன்னமும் அங்கீகரிக்காத நிலையில், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அவர் கூறினார்.

எனவே, பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடையாக இல்லை என்று அவர் வாதிட்டார்.

இது தொடர்பாக தாம் விரைவில் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Read more

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது!

July 16 2019 , Written by lankatime

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது!

கடந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 279 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 05 ஆம் திகதி முதல் இன்று வரை மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிலியந்தல, ஹெதிகம பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளர், அவருடைய மகன்கள் இருவர் மற்றும் டெட்டனேட்டர் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

போதைப்பொருட்களுடன் யுவதிகள் 03வர் உட்பட 12 பேர் கைது!

July 14 2019 , Written by lankatime

போதைப்பொருட்களுடன் யுவதிகள் 03வர் உட்பட 12 பேர் கைது!

மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பகுதியில் படகு சவாரி செய்வதற்காக வருகை தந்த யுவதிகள் மூவர் உட்பட 12 பேர் போதைப் பொருட்களுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த ஐஸ், ஹசீஸ், கேரள கஞ்சா, போதை மாத்திரைகள் உட்பட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, வெலிகம, வத்தள, கனேமுல்ல, குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறைக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது!

நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொய்யான தகவலை வழங்கிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்ல பகுதியில் வைத்து இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Read more

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ள EU ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு இணைப்பாளர் கில்லஸ்!

July 14 2019 , Written by lankatime

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ள EU ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு இணைப்பாளர்  கில்லஸ்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு இணைப்பாளர் கில்லஸ் டி காசோவ்  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்துதல், அனுபவப் பகிர்வு என்பவற்றுக்கான முயற்சிகளுக்கு உதவியளித்தல் முதலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தான் நாட்டின் ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாமும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read more

மரண தண்டனையை தடுத்தால் அன்றைய தினமே தேசிய துக்க தினம்: ஜனாதிபதி!

July 14 2019 , Written by lankatime

மரண தண்டனையை தடுத்தால் அன்றைய தினமே தேசிய துக்க தினம்: ஜனாதிபதி!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான மரண தண்டனையை ரத்து செய்யவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டால், அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வளவ வலயத்தில் அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் காணி உறுதிப்பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சிலரின் தேவைக்கேற்ப மரண தண்டனையை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு தலைமைத்துவம் ஏற்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Read more

என் வாயை மூடினாலும், மைத்திரிக்கு எதிராக என் வாய் இயங்கும் - ஹிருனிகா!

July 13 2019 , Written by lankatime

என் வாயை மூடினாலும், மைத்திரிக்கு எதிராக என் வாய் இயங்கும் - ஹிருனிகா!

ஜனாதிபதியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட நாம் முன்வரும்போது எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதனால் எமது உயிர் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்காக குரல்கொடுத்த அதே வாய் இனி அவரை தோற்கடிப்பதற்காக குரல் கொடுக்குமெனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  சிறப்புரிமை பிச்சினையை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதன்போது தெரிவிக்கையில்,

கடந்த ஜுலை 1ஆம் திகதி அரச தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஜுன் 30ஆம் திகதி அரச தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மறுநாள் நடக்கவுள்ள நிகழ்ச்சிக்கு வர வேண்டாமெனவும் ஜனதிபதி தன்னை அழைக்க வேண்டாமென கூறியுள்ளதாகவும் எனக்கு கூறினார்.

இதன்மூலம் அரச தொலைக்காட்சியினால் எனக்கென ஒதுக்கப்படும் நேரத்தை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தடை செய்வதன் மூலம் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு இதனை முன்வைக்குமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Read more

இறுதி நேரத்தில் ரணிலுக்கு செக் வைத்த சம்பந்தன்!

July 13 2019 , Written by lankatime

இறுதி நேரத்தில் ரணிலுக்கு செக் வைத்த சம்பந்தன்!

கல்முனை விவகாரத்தில் சாதகமான பதில் வழங்கப்படாவிட்டால் கூட்டமைப்பு அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என அழுத்தம் திருத்தமாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் முறைப்படியான நடவடிக்கைகளை உடன் ஆரம்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்தா

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று முன்தினம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டிருந்தத

இந்த அவநம்பிக்கை பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு 92 பேர் ஆதரவாகவும் எதிராக 119 பேரும் வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது

இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக உறுதியான உத்தரவாதங்கள் தேவையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனடிப்படையில், ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்தது. இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது கல்முனை விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. அந்த வகையில், முறைப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, கணக்காளரை நியமிப்பதற்கு இதன்போது வாக்களிக்கப்பட்டது.

அத்துடன் அமைச்சின் செயலாளர்களிற்கும், கணக்காளர் நியமிக்கப்பட வேண்டியுள்ளதை அறிவித்தார். கணக்காளர் நியமிக்கப்பட்டு கல்முனை பிரதேச செயலகத்திற்கு தனியான வங்கிக்கணக்கு ஆரம்பிப்பதற்கு திறைசேரி செயலாளரின் அனுமதி தேவையாக இருந்தது

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மங்கள சமரவீர அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தார். இதேவேளை, கல்முனை விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த முஸ்லிம் காங்கிரசின் ஹரீஷ் எம்.பியும் பிரதமர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

முஸ்லிம் பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்றுடன் அவர் வந்திருந்தார். அந்த குழுவுடனும் பேச்சு நடத்தப்பட்டு, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க அவர்களின் ஆதரவும் பெறப்பட்டது.

முதற்கட்டமாக கணக்காளரை நியமித்து, அடுத்த கட்டமாக எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு விடயங்களில் கூட்டமைப்பின் நிபந்தனைகள் இந்த சந்திப்பின் போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து, தொலைபேசி வழியாக அந்த பணிகளை உடனடியாக நிறுத்தும் படி பிரதமர் உத்தரவிட்டார்.

ஓமந்தையில் சிங்கள பகுதிகளை உள்ளடக்கி தனியான சிங்கள பிரதேச செயலகத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வந்தது.

அதை உடனடியாக நிறுத்தும் படி கூட்டமைப்பு வலியுறுத்தியது. உடனடியாக அந்த பணிகளையும் நிறுத்துவதற்கு பிரதமர் உடன்பட்டார்.

இந்நிலையிலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more
1 2 3 4 5 6 7 8 9 10 > >>