இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று நியமனம்!
புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையின் 23வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று புதிய இராணுவ தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திரசில்வா இராணுவ படைகளின் பிரதானியாகவும் கடைமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஜப்பானின் அமைதித் தூதர்!
ஜப்பானின் அமைதித் தூதர் யுசுஷி அகாஷி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று இருவருக்கிடையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
(is)தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாதே மிலாது இ செயற்பாட்டாளர்கள் கைது!
தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாதே மிலாதே இப்ராஹிம் ஆகிய அமைப்புக்களை சேர்ந்த (is) மேலும் இரண்டு செயற்பாட்டாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு சேவையினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய அம்பாறை பிராந்தியத்துக்கு பொறுப்பான காவற்துறை அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளால் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் சஹீர் மற்றும் மொஹமட் அவுனாத் ஆகிய இருவரும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீமுடன் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் காலி மற்றும் கெலிஒய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சில நாட்களாக சஹ்ரான் ஹாசீமின் உதவியாளர்கள் 11 பேர் அம்பாறையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி பளை மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் யாழ்ப்பாண காவற்துறையினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, 41 வயதுடைய சட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
jvp பேரணி தொடர்பில் உதய கம்மன்பில கருத்து!
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சக்தி பேரணி நேற்றைய தினம் காலி முகத்திடலில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்த மக்கள் இயக்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த பேரணியில் பாடசாலை மாணவர்களுடைய சங்கங்களில் நடைப்பெறும் விடயத்தைப் போன்றே, நேற்றைய கூட்டமும் இடம்பெற்றதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.