ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெளிவுப்படுத்தியுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர்,
தயவு செய்து வாக்களிக்கும் போது இலக்கம் ஒன்றினை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு மேலதிகமாக தேவை ஏற்பட்டால் மற்றுமொரு வேட்பாளருக்கு அல்லது இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை அளிக்க முடியும்.
அதற்காக, குறித்த வாக்காளர்களுக்கு தனது விருப்பத்தின் பேரில் அவர்களின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் முறையே 2 மற்றும் மூன்றாவது வாக்கினை செலுத்தும் வாக்காளரின் பெயருக்கு அருகில் 3 என்றும் குறிக்க முடியும்.
ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதற்கு இலக்கம் ஒன்றிற்கு பதிலாக வழமையாக பயன்படுத்தப்படும் புள்ளடி மாத்திரம் இடப்பட்டிருந்தாலும் குறித்த வாக்கு செல்லுபடியானதாக ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.