Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

PM Modi Announces $450 Million Line Of Credit To Sri Lanka After Meeting With Rajapaksa

November 29 2019 , Written by lankatime

PM Modi Announces $450 Million Line Of Credit To Sri Lanka After Meeting With Rajapaksa
PM Modi Announces $450 Million Line Of Credit To Sri Lanka After Meeting With Rajapaksa

On his first foreign visit after taking the reins of Sri Lanka, President Gotabaya Rajapaksa sealed a major deal Indian Prime Minister Narendra Modi with on security and development, including USD 50-million financial assistance for counter-terrorism efforts. 

After a 'fruitful' meeting with Rajapaksa on Friday, PM Modi announced a line of credit of USD 400 million for development projects in  Sri Lanka besides granting a separate fund of USD 50 million to help the country deal with challenges of terrorism.

"I assured Sri Lankan president of India's help in the overall development of the country," He added, "India's line of credit of USD 400 million will further boost Sri Lanka's development," Modi said.

"We held fruitful talks. The focus was on security cooperation. We also focused on economic cooperation," said Rajapaksa.

Modi's announcement of financial assistance to Sri Lanka to deal with the challenge of terrorism comes in the aftermath of the Easter Sunday terrorist attack in Colombo in April this year, which left more than 250 people dead in suicide bombings.

"I am confident that new government will fulfil aspirations of the Tamil community in Sri Lanka," PM Modi said as Sri Lanka was torn for decades by a civil war between Separatists from the Tamil minority community and the Sinhala Buddhist-dominated government. The war only ended in 2009.

Modi also said a stable Sri Lanka is not only in interest of India but for entire Indian Ocean Region.

"I want to bring the relationship between India and Sri Lanka to a very high level," the Sri Lankan President told the media earlier in the day following his ceremonial welcome at Rashtrapati Bhavan in the presence of President Ram Nath Kovind and PM Modi. 

PM Modi had telephoned Rajapaksa to congratulate him on his electoral win and invited him to visit India as his first official foreign tour.

Rajapaksa, a former defence secretary who is credited with ending the country's long civil war, was sworn in as the island nation's new president on November 18, a day after he won the closely fought presidential election in the island nation.

Read more

ஜனாதிபதி கோட்டா ராஜபக்க்ஷ – பிரதமர் மோடி சந்திப்பு!

November 29 2019 , Written by lankatime

ஜனாதிபதி கோட்டா ராஜபக்க்ஷ – பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று(29) இந்திய ஜனாதிபதி ராமநாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய பிரதமரின் அழைப்பையேற்று தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு சென்றமை குறித்து இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு ஜனாதிபதியின் இந்த பயணத்தின் ஊடாக மேலும் பலப்படுமென தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்திகளை நோக்காகக் கொண்ட பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய அணுகுமுறையினூடாக இந்திய - இலங்கை தொடர்பினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்பது பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்பாகுமெனவும் அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தரமான வர்த்தக கட்டுப்பாட்டு முறைமையொன்று காணப்பட வேண்டியது அதற்கான அடிப்படை தேவையாகும் எனவும் இதனூடாக வெளிநாட்டு முதலீடுகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இரு நாடுகளுக்குமிடையிலான நட்பினை மேலும் பலப்படுத்த தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதேநேரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.

Read more

ரஷ்ய தூதுவர் யுரி மடேரி - பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

November 26 2019 , Written by lankatime

ரஷ்ய தூதுவர் யுரி மடேரி - பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!
ரஷ்ய தூதுவர் யுரி மடேரி - பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!ரஷ்ய தூதுவர் யுரி மடேரி - பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!ரஷ்ய தூதுவர் யுரி மடேரி - பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று நேற்று  சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ரஷ்ய தூதுவர்  மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றது.

Read more

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

November 24 2019 , Written by lankatime

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அதிகாரங்களின் ஊடாக 25 நிர்வாக மாவட்டத்தினுள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் முப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Read more

பொதுமக்களின் பாதுகாப்பு- இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

November 23 2019 , Written by lankatime

பொதுமக்களின் பாதுகாப்பு- இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Read more

நாட்டின் தேசிய பாதுகாப்பை நவீன முறைகளை பயன்படுத்தி ஜனாதிபதி நடவடிக்கை - நாமல் ராஜபக்ஷ!

November 23 2019 , Written by lankatime

நாட்டின் தேசிய பாதுகாப்பை நவீன முறைகளை பயன்படுத்தி  ஜனாதிபதி நடவடிக்கை - நாமல் ராஜபக்ஷ!

நவீன முறைகளை பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அதில் சிறந்த அனுபவம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more

2020 ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்தல்!

November 23 2019 , Written by lankatime

2020 ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்தல்!

2020 ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாகும். இதன்படி நான்கரை வருடங்கள் நிறைவடைந்த பின்னர் .பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுப்பார்.

லங்காதீ

Read more

புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை!

November 23 2019 , Written by lankatime

புலம்பெயர்ந்த  புலி ஆதரவாளர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை!

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம்.

இவர்கள் புலம்பெயர்ந்த  புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர்.  நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக செயற்படும் போது, வெளிவிவகார அமைச்சிலுள்ள இந்த அதிகாரிகள், சகவாழ்வைச் சீரழிப்பதாக எம்மைக் காட்டிக் கொடுத்தனர்.

மேலும் நாங்கள், ஜெனீவா சென்று நாட்டுக்காக குரல் கொடுத்தபோது எம்மைப் பற்றி வெளிவிவகார அமைச்சிலுள்ள சிலர் தகவல் திரட்டினர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!

November 23 2019 , Written by lankatime

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் பிரதமர் மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read more
1 2 3 4 5 6 7 8 9 > >>