Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது - எம்.பி.ரவீந்திரநாத் குமார்!

April 25 2020 , Written by lankatime

கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது - எம்.பி.ரவீந்திரநாத் குமார்!

தேனி மக்களவை எம்.பி.ரவீந்திரநாத் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் R.P.உதயகுமார் தலைமையில்   நேற்று நடைபெற்றது.

தமிழக அரசு அறிவித்துள்ள 144 ஊரடங்கு தடையை முழுமையாக பின்பற்றி கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த ஆய்வு கூட்டம் சமூக இடைவெளி பின்பற்றி இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் பேசியதாவது:

தேனி மக்களவை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி உள்ளது சோழவந்தான் தொகுதியில் தான் கொரோனா தொற்று பரவவில்லை வாழ்த்துக்கள் என்றார்.

வளர்ச்சியடைந்த நாடுகள் கொரோனா பாதிப்பிலிந்து மீள முடியவில்லை இறப்பு விகிதம் அதிகமாகி கொன்டே போகிறது.

ஆனால் இந்திய நாட்டில் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு அமல்படுத்தி கோரோனா பாதுகாப்பை பலபடுத்தி கொரோனா பரவாமல் தடுப்பதற்கு முழுக்கு போட்டார்.

எதிர்கட்சி தலைவர் அம்மா உணவகத்தில் சாப்பாடு வழங்குவதை கொச்சைபடுத்தி வருகிறார். அம்மா கொண்டு வந்த உன்னதமான திட்டம் ஏழை ,எளிய மக்கள் பயன் பெறும் அம்மா உணவகம்அந்தந்த பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகத்தை மாவட்ட செயலாளர்கள், MLA , அமைச்சர்கள் பொறுப்பேற்று இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் இதை கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது என்றார்

 வருவாய் துறை அமைச்சர் Rp.உதயகுமார் பேசியதாவது:

மே 3 ம் தேதி வரை தடைகள் தொடரும் மக்கள் அதை கடைபிடிக்க வேண்டும். 3ம் தேதிக்கு பிறகு நோய் தொற்று வீரியத்தை பொறுத்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்து முதல்வருக்கு அறிக்கை தருவர் அதனடிப்படையில் அடுத்த அறிவிப்பு வெளிவரும்.

பத்திரிக்கையாளர்கள், ஊடகம், செய்தியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தங்களது பணியை தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் நிதியுதவி!

April 25 2020 , Written by lankatime

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் நிதியுதவி!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது.

உள்ளுர் முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுஇ

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், “ஜனாதிபதியின் கொவிட்-19 செயலணியின் சிவில் சமூகக் குழுவின் ஒரு அங்கமாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை உள்ளது.

மாவட்ட மட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான குழுக்கள் உள்ளடங்கலாக, நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட வலையமைப்புடன், நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் உலர் உணவுப் பொதிகளை தேசிய சமாதானப் பேரவை வழங்கும்.

பெரும்பாலானோருக்கு முடக்கம் மற்றும் 24 மணி நேர ஊரடங்கு என்பன பெரும் சவாலாகியுள்ள நிலையில், உதவி அதிகம் தேவைப்படுபவர்களுக்கு தேசிய சமாதானப் பேரவை உதவி வழங்கும்.

முன்னெப்போதும் இடம்பெற்றிராத இந்த உலகளாவிய நெருக்கடிக்கு பதிலளிப்பதில் இலங்கையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களின் முயற்சியால் நான் ஈர்க்கப்பட்டேன்.

இந்த நோயையும் அதன் கடுமையான பொருளாதார தாக்கங்களையும் எதிர்த்துப் போராடும்போது இலகுவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, கனடாவின் ஆதரவின் மூலம்  உதவ எதிர்பார்க்கின்றோம்.

பல்வேறு சமூகங்களுடனும், நாடு முழுவதும் அடையாளங் காணப்பட்ட தேவைக்கு விரைவாக பதிலளிப்பதற்கு தேசிய சமாதானப் பேரவையுடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைவதாகவும்“ அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

குரங்கிற்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லையா? – எம்.எஸ்.பாஸ்கர் காட்டம்!

April 24 2020 , Written by lankatime

சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரை புதைக்க அனுமதி மறுத்து மக்கள் தாக்கியது குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
கொரோனாவால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது, அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கற்களை கொண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அளவில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் நடத்திய நிலையில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவரை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. மருத்துவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். மருத்துவர்களுக்கும், கடவுளுக்கும் மட்டும் தான் உயிரைக் காப்பாற்றும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா வந்து இறந்துவிட்டால், புதைப்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்று கல்லைக் கொண்டு அடிப்பதும், ஆம்புலன்ஸை உடைப்பதும் நியாயமா? சுடுகாடு யாருக்குச் சொந்தம்?

வெளியூருக்குப் படப்பிடிப்புக்குச் சென்ற போது, ஒரு குரங்கு வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டது. உடனே அந்த இடத்தில் சுமார் 100 குரங்குகள் கூடிவிட்டது. அனைத்து குரங்குகளும் கண்ணீர் விட்டு அழுதன. அந்தக் குரங்கிற்கு இருக்கிற அறிவு, நமக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது. தயவு செய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

குரங்கிற்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லையா? – எம்.எஸ்.பாஸ்கர் காட்டம்!
Read more

நாடு முழுதும் 33 கோடி பேருக்கு ரூ.31 ஆயிரம் கோடி: ஏழைகள் நல திட்டத்தின் கீழ் நிதியுதவி!

April 24 2020 , Written by lankatime

நாடு முழுதும் 33 கோடி பேருக்கு ரூ.31 ஆயிரம் கோடி: ஏழைகள் நல திட்டத்தின் கீழ் நிதியுதவி!

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளோரை பாதுகாக்க, பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின்கீழ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம், நிவாரண உதவிகளை அறிவித்தார். 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிவாரண திட்டத்தை அமல்படுத்தும் நடைமுறைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில், ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 33 கோடி பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு, உதவி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை, பிரதமரின் விவசாயிகளுக்கான திட்டத்தின்கீழ், எட்டு கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, தலா, 2,000 ரூபாய் 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளது.இதைத்தவிர, 20.05 கோடி பெண்களுக்கு, அவர்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் தலா, 500 ரூபாய் டெபாசிட் செயப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம், 10 ஆயிரத்து, 025 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவை பெண்கள் என, 2.82 கோடி பேருக்கு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், 2.66 கோடி பேருக்கு, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.நிதி அமைச்சகம், சம்மந்தபட்ட துறை அமைச்சகங்கள், அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம் என அனைத்து தரப்பினரும் மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்ததை உறுதிபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373!

April 24 2020 , Written by lankatime

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373!

கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கெனவே 368 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்துகொடை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று(24) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(24) இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது

Read more

இங்கிலாந்து, ஜெர்மன் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது, இன்று மனிதர்களுக்கு பரிசோதனை!

April 23 2020 , Written by lankatime

இங்கிலாந்து, ஜெர்மன் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது, இன்று மனிதர்களுக்கு பரிசோதனை!

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு ஆய்வு செய்தாலும், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்களைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகளுக்கு செலுத்தி வெற்றி கண்டனர். இதையடுத்து இன்று தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளனர்.

இன்றய பரிசோதனைகள் வெற்றி பெற்றால் உடனடியாக மனித குலத்திற்கு பயன்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஜெர்மனியில் உள்ள பால் எர்லிச் ஆய்வு நடுவம் கண்டு பிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இன்று அல்லது நாளை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்கிறது என்ற செய்தி ஜெர்மன் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Read more

இந்தியாவிற்குள் கொரோனாவுடன் பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான் - ஜம்மு-காஷ்மீர் போலீஸ் இயக்குநர்!

April 23 2020 , Written by lankatime

இந்தியாவிற்குள் கொரோனாவுடன் பயங்கரவாதிகளை  அனுப்பும் பாகிஸ்தான் - ஜம்மு-காஷ்மீர் போலீஸ் இயக்குநர்!

பாகிஸ்தான், கொரோனா வைரஸ் பாதித்த பயங்கரவாதி நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகமே கொடிய தொற்றுநோயான கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. அவ்வபோது போர் நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 9749 பேர் பாதிக்கப்பட்டு, 209 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 4,328 பேர், சிந்து மாகாணத்தில் 3,053 பேர், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் 1,345 பேர், பலூசிஸ்தான் 495 பேர், கில்கிட்-பால்டிஸ்தான் 284 பேர், இஸ்லாமாபாத் 194 பேர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 51 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதித்த பாக்., நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் கூறியதாவது: முன்பு பயங்கரவாதிகளை மட்டுமே இந்தியாவிற்கு அனுப்பும் பாகிஸ்தான், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அனுப்பத் தொடங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கவலைக்குரிய விஷயம். அவர்கள் இங்குள்ள மக்களிடையே நோய் தொற்றை பரப்புவார்கள். அதனால் முன்னெச்சரிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Read more

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை : பாதுகாப்புச் செயலாளர்!

April 23 2020 , Written by lankatime

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில்  கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை : பாதுகாப்புச் செயலாளர்!

இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை திறம்பட கையாள முடியும்.

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் இருநாடுகளுக்குமிடையில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை

 இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் முப்படைமற்றும் பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி தமது திறன்களை ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

 "எமது இராணுவம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அவசரகால நிலைமையை கையாள்வதில் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் தொழில்வான்மையை ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளது," என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், ஒரு நாடு, அதன் புலனாய்வு நிறுவனங்களை, இராணுவ மற்றும் சுகாதார நிறுவனங்களுடன் இணைப்பதன் ஊடாக எவ்வாறு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் ஏனைய நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

 "இலங்கையின் புலனாய்வு அமைப்புகள், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் நெருக்கமாக தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வமைப்புக்கள், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயல்முறைக்கு வழிகாட்டுகின்றன." என அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையில் இந்திய இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், இவ்வாறாக இரண்டு நாடுகளுக்கு இடையில் எத்தகைய கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

Read more

காஷ்மீரில் நாட்டை துண்டாடும் வகையில் கருத்து பரப்பிய பத்திரிக்கையாளர் கைது!

April 23 2020 , Written by lankatime

காஷ்மீரில் நாட்டை துண்டாடும் வகையில் கருத்து பரப்பிய பத்திரிக்கையாளர் கைது!

காஷ்மீர் மண்டல சைபர் காவல் நிலையம், செவ்வாயன்று பத்திரிகையாளர் கோஹர் கிலானி மீது வழக்கு பதிவு செய்தது. சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட பதிவுகள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தது.

சமூக ஊடகங்களில், கோஹர் கிலானி தனது பதிவுகள் மூலம் பயங்கரவாதத்தை பரப்புவதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்ததாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு பாரபட்சமற்ற வகையில் சமூக ஊடக தளங்களில் அந்த நபர் பதிவுகள் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜீலானியின் சட்டவிரோத செயல்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை நியாப்படுத்துவதாகவும், நாட்டிற்கு எதிராக அதிருப்தியை பரப்புதல் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் எண் 11/2020 பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காகவும், குற்ற விரோத நோக்கத்துடன் தேச விரோத பதவிகளைப் பகிர்ந்ததற்காகவும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மஸ்ரத் சஹ்ரா மற்றும் பீர்சாடா ஆஷிக் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ஷோபியன் என்கவுன்டர் தொடர்பாக பீர்சாடா ஆஷிக் ஒரு போலி செய்தியை வெளியிட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, தி இந்துவில் ஆஷிக் எழுதிய கட்டுரை உண்மையில் தவறானது மற்றும் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து சரியான தகவல்களைப் பெற முயற்சிக்காமல் வெளியிடப்பட்டது.

Read more
<< < 1 2 3 4 5 > >>