Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கொரோனா தடுப்பு மேலாண்மையில் மற்ற உலக தலைவர்களை விட முதல் இடம் பிரதமர் மோடிக்கே - ஆய்வு தகவல்!

April 22 2020 , Written by lankatime

கொரோனா தடுப்பு மேலாண்மையில் மற்ற உலக தலைவர்களை விட முதல் இடம் பிரதமர் மோடிக்கே - ஆய்வு தகவல்!

உலகெங்கும் பீதியை கிளப்பி கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு சவால் விட்டு வரும் வுஹான் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் கடுமையான முடிவுகளை எடுத்து தடுப்பு பணிகளில் வெற்றி கண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆண்டு தோறும் உலக சுகாதார விவகாரங்களை ஆய்வு செய்து வெளியிடும் மார்னிங் கன்சல்ட் என்கிற நிறுவனம் மற்ற தலைவர்களின் செயல்பாடுகளையும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பல புள்ளி விவரங்களை படங்களுடன் அளித்துள்ளது. அதில் செய்யப்பட்ட மதிப்பீடுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி வேறு எந்த உலகத் தலைவரையும் விட மிக உயர்ந்த ஒப்புதல் மதிப்பீடுகளாக 68 புள்ளிகளை பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

130 கோடி மக்கள்தொகை கொண்ட அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பல மடங்கு அவர்களை விட தொற்று பரவலை கட்டுப் படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமேலும், ஆரம்பத்தில் சிறிய அளவு பிரச்சினைகளையே கையாண்டு கொண்டிருந்த இந்தியாவுக்கு தப்லீஹி ஜமாஅத் நிகழ்ச்சி காரணமாக வழக்குகள் அதிக எண்ணிக்கையில் உயர்ந்த பின்னும், பல சோதனைகளை, வேதனைகளை தாண்டி குழப்பத்திலிருந்தும் பேரழிவிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவால் முடிந்தது என்றும், இதன் மூலம் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்ற நாட்டு தலைவர்களை காட்டிலும் அதிக பெருமை அடைகிறார் என்றும் ஏப்ரல் 14 ஆம் தேதி நிலவரப்படி, அவரது நிகர ஒப்புதல் மதிப்பீடு 68 என்றும் அந்த ஆய்வு பத்திரிக்கை கூறியுள்ளது.

இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோடிக்கு 62 ஆக இருந்தது என்றும் மெக்ஸிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், அந்தக் காலகட்டத்தில் 36 ஒப்பீட்டு எண்களை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார் என்றும், அதே ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் 39 ஒப்பீட்டு எண்களை பெற்றதாகவும் ஜப்பானின் அபே 33 எங்களை பிடித்து இறுதியில் இருந்ததாகவும் மார்னிங் கன்சல்ட்டின் தரவு காட்டுகிறது.

இது குறித்து மார்னிங் கன்சல்ட்டிங் இதழ் தனது டிராக்கரில் புள்ளிவிபர தரவுகளை மேற்கோள் காட்டும் வரைபடம் ஒன்றை சேர்த்துள்ளது. இதில் பிரதமர் மோடியை குறிப்பிடும் நீல வரைபடம் வேறு எந்த உலகத் தலைவர்களுக்கும் அவர்களின் ஒப்புதல் மதிப்பீடுகளுக்கும் மேலாக உயர்ந்திருப்பதைக் காணலாம்.

Read more

உலகின் 600 ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி-மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

April 22 2020 , Written by lankatime

உலகின் 600 ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி-மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

கொரோனா என்ற புதிய கொடிய தொற்று நோய் பரவிய சில மாதங்களில், ஒன்றரை லட்சம் பேரின் உயிரைப்பறித்துக் கொண்டது. பல லட்சம் பேரை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தையே உருக்குலைத்துவிட்டது.

முதல் கொரோனா தடுப்பூசி சீனாவிலிருந்து முதல் மரபணு வரிசை கிடைத்த நான்கு வாரங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. சிஇபிஐ என்ற தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான கூட்டணியின் முதலீடு காரணமாக இது சாத்தியமானது. சிஇபிஐ (CEPI) என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு உலகளாவிய கூட்டமைப்பு ஆகும். தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் மற்றும் பரவலின் போது மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கும் இது உதவுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இது தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றன. தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் சிறிதளவுக்கு நம்பிக்கையை அளித்தாலும் இன்னும் ஆதாரப்பூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவும் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Read more

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த இந்தியாவின் இராணுவ குழு இலங்கைக்கு!

April 22 2020 , Written by lankatime

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த இந்தியாவின் இராணுவ குழு இலங்கைக்கு!

கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த இந்தியாவின் இராணுவ குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக PTI செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை மட்டுமின்றி, தென் ஆசிய நாடுகளான பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இவ்வாறு இந்தியாவின் இராணுவ குழுக்களை மேலும் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் எந்த திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகங்கள் இது சம்பந்தமாக செய்திகளை வெளியிட்டிருந்தாலும் அப்படியான எந்த திட்டங்களும் இல்லை எனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே இப்படியான வெளிநாட்டுப் படையினரின் பலத்தை பயன்படுத்தும் எவ்வித தேவையும் ஏற்டவில்லை எனவும், நாட்டில் நிலவும் நிலைமையை எதிர்நோக்கும் இயலுமை இலங்கையின் முப்படையினருக்கு இருப்பதாகவும் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Read more

கோவிட் – 19 க்கு எதிரான இலங்கையின் தாக்கம் தொடர்பான நிலைமைகளை இராணுவ தளபதி விளக்கம்!

April 22 2020 , Written by lankatime

கோவிட் – 19 க்கு எதிரான இலங்கையின் தாக்கம் தொடர்பான  நிலைமைகளை இராணுவ தளபதி விளக்கம்!

கோவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இலங்கையிலுள்ள தூதரகங்களிலுள்ள ஒன்பது வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோச பிரதிநிதிகளுக்கு இலங்கையில் தற்போதைய கொரோனா தொற்று நோய் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கங்களை தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கெப்டன் சீன் அன்வின், பங்களாதேசத்தின் உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையத் எம், இந்திய உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஹாகு புக்காரா, ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மைல் நசீர், மாலைதீவு உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சஜாட் அலி, ரஷியா தூதரகத்தின் கேர்ணல் டெனிஷ் 1 ஸ்கோடா, பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஜக்கிய இராஜ்ஜியத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டேவிட், ஜக்கிய இராஜ்ஜியத்தின் அஷ்மன், அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரேவிஷ் ரே கொக்‌ஷ் போன்றோர் இணைந்து கொண்டனர்.

இராணுவ தளபதியின் உரையின் போது, இந்த இயல்பு பற்றிய ஒரு பயனுள்ள கலந்துரையாடலுக்கு வருகை தந்த வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.,மேலும் உரையாற்றுகையில் COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆயுதப் படைகள் சிறப்பான பாத்திரங்களை வகிக்கின்றனர். இதேபோல், பங்களாதேஷ பாதுகாப்பு ஆலோசகர் ஊரடங்கு உத்தரவின் போது பல்வேறு உணவு வகைகளை தெருக்களில் கடந்து செல்வது மற்றும் ஆயுதப்படைகளின் மூலோபாய அணுகுமுறைகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இராணுவ தளபதி அவர்கள் இந்த தூதரக பிரதிநிதிகளுக்கு ஏதாவது தேவைகள் ஏற்படுமாயின் தன்னை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு விவகார அமைச்சின் வேண்டுகோளின் பேரில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க மற்றும் கோவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் கபில தொலஹே அவர்கள் இணைந்து கொண்டனர்.

Read more

நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது - பாதுகாப்புச் செயலாளர்!

April 22 2020 , Written by lankatime

நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது - பாதுகாப்புச் செயலாளர்!

தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது.

குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும்.

சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டு மக்கள் அனைவருக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 "நாம், எமது நாட்டு மக்கள், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களினால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை, அதன் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் உதவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ் - ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா..பாதிப்பு!

April 21 2020 , Written by lankatime

தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ் - ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா..பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 48, கோவையில் 31, சென்னை ஸ்டான்லியில் 26 பேர் என மொத்தம் 178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன. இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,596 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 358 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தென்காசி 5, விழுப்புரம் 4, செங்கல்பட்டு, தஞ்சையில் தலா 3, கள்ளக்குறிச்சி 2, காஞ்சிபுரம், தூத்துக்குடி மற்றும் கோவையில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா..பாதிப்பு 1,596 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டுமே 178 பேர் குணமடைந்து, மொத்தம் 635 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து இன்று ஒரே நாளில் 6,060 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 53,045 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 1,596 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 940 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு கண்காணிப்பில் 22,254 பேர் இருக்கின்றனர். அரசு கண்காணிப்பில் 145 பேர் உள்ளனர். மேலும் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து இதுவரை 87,159 பேர் வீடு திருப்பியுள்ளார்கள். இன்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் அங்கு 358 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Read more

என்றும் தேசப்பணியில் தமிழ்நாடு பாஜக - விநியோகிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள்!

April 21 2020 , Written by lankatime

என்றும் தேசப்பணியில் தமிழ்நாடு பாஜக - விநியோகிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள்!
என்றும் தேசப்பணியில் தமிழ்நாடு பாஜக - விநியோகிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள்!
என்றும் தேசப்பணியில் தமிழ்நாடு பாஜக - விநியோகிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள்!

என்றும் தேசப்பணியில் தமிழ்நாடு பாஜக

* விநியோகிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் - 32,10,490

* விநியோகிக்கப்பட்ட மோடி கிட் - 6,37,868

* விநியோகிக்கப்பட்ட முக கவசங்கள் - 5,77,015

* விநியோகிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் - 8,69,433

* களப்பணியில் உள்ள தொண்டர்கள் - 4,25,648

* PM-CARES நிதி வழங்கிய பாஜகவினரின் எண்ணிக்கை - 38,187

மொத்த வீடுகள் - 17,55,784
மொத்த பயனாளிகள் - 57,61,567

* 27 மார்ச் 2020 முதல் 19 ஏப்ரல் 2020 வரை.

இன்று பல்வேறு தரப்பை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஊரடங்கு காலத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய "மோடி கிட்" தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழங்கினார்கள் ...

நிகழ்ச்சியை பாஜக வட சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் திரு.தட்சினாமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் ‌...

என்றும் தேசப்பணியில் தமிழ்நாடு பாஜக!

Read more

ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைகூருகின்றேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

April 21 2020 , Written by lankatime

ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைகூருகின்றேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைகூருகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கொடூரமான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம்.

இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த, காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவரையும் கவலையுடன் நான் நினைகூருகின்றேன்.

இலங்கையர்களாகிய அனைவரும் காலை 8.45 மணிக்கு விளக்கேற்றி ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துமாறு உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன். என முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைகூரும் நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் இனம் மத பேதமின்றி அனைவராலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

2019 உயிர்த்த ஞாயிறு is தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி!

April 21 2020 , Written by lankatime

2019 உயிர்த்த ஞாயிறு is தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி!

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது 2019 ஏப்ரல் 21 ஆந் திகதி மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள மூன்று பிரதான ஹோட்டல்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட is தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக 250க்கு மேற்பட்டோர் மரணித்ததுடன், 500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மரணித்த மற்றும் காயமடைந்தோரில் பெரும்பாலானோர் ,யேசுநாதர் உயிர்த்தெழுந்தமையினை நினைவுபடுத்தும் வகையில் தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்கள் ஆவர். இது ஆசியாவில் மாத்திரமன்றி, உலக மட்டத்திலும் சிவில் பிரஜைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் ஆகும். அது சர்வதேசத்தின் நினைவுகளில் உள்ள 1995 டோக்கியோ நகர விஷ வாயுத் தாக்குதல், 1995 ஒக்லஹோமா குண்டுத் தாக்குதல், 2005 லண்டன் குண்டுத் தாக்குதல், 2008 மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்றளவு சேதங்கள் ஏற்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக உயிருக்காகப் போராடி அண்மையில் மரணத்தைத் தழுவினார். காயமடைந்த சிலர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இலங்கையருக்கு தற்கொலைத் தாக்குதல்கள் என்பது புதிய ஒன்றல்ல. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பிரிவினைவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் திகதி, இலக்கான இடங்கள், பங்குபற்றிய தீவிரவாதிகளின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கூட எமது நட்பு நாடொன்றின் உளவுப் பிரிவினரால் முன்கூட்டியே அப்போது ஆட்சியிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. அதனால் இந்தத் தாக்குதலை இலகுவாகத் தடுத்திருக்க முடியும்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இந்த தாக்குதல்களில் மரணித்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் தமது வீடுகளில் விளக்கேற்றுமாறு அனைத்து கத்தோலிக்க பக்தர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு நான் அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

Read more
<< < 1 2 3 4 5 > >>