Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கொரோனாவில் இருந்து மீண்ட 6 லட்சத்து 48 ஆயிரம் பேர்!

April 21 2020 , Written by lankatime

கொரோனாவில் இருந்து மீண்ட 6 லட்சத்து 48 ஆயிரம் பேர்!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 6 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 71 ஆயிரத்து 930 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 56 ஆயிரத்து 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 129 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரஸ் பரவியவர்களில் உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 45 ஆயிரத்து 8 பேர் மருத்துவத்துறையினரின் அயராத சேவையால் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Read more

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு!

April 21 2020 , Written by lankatime

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு!

கரோனா நோய்த்தொற்றின் கோரமான பாதிப்பு இனி தான் ஏற்படவுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு தளா்வு உள்பட தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து உலக சுதாரா அமைப்பின் தலைமை இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக மிக மோசமான பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். கரோனா பாதிப்பானது, கடந்த 1918-ஆம் ஆண்டு 10 கோடி போ் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ நோயைப் போல மிகுந்த ஆபத்தானது.

எனினும், தற்போது நம்மிடம் மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் உள்ளதால் கரோனாவால் பேரழிவு ஏற்படாமல் நம்மால் தடுக்க இயலும். இருப்பினும், கரோனா நோய்த்தொற்றின் கோரமான பாதிப்புகளை இனிதான் நாம் காண இருக்கிறோம். அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவிலான மக்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் வீரியம் குறித்து புரிதலில்லை என்று டெட்ரோஸ் அதானோம் கூறினாா்.

Read more

சன் டிவியை வாழ வைக்கும் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய தயாநிதி மாறன்!

April 21 2020 , Written by lankatime

சன் டிவியை வாழ வைக்கும் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய தயாநிதி மாறன்!

கொரனோ தொற்றிற்கு, எதிராக மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள, செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், என பலர் இரவு பகலாக அரும்பாட்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு இருமுறைக்கு மேல் இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என்று பல நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

திமுக எம்.பி தயாநிதி மாறன் நேற்று ஒரு சிலருக்கு மளிகை சாமான் பொருட்களை வழங்கி விட்டு. வழக்கம் போல்  மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். பாரதப் பிரதமர் நிவாரண நிதியை மக்களிடம் பெறுவதை.

மக்களே பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறார்கள், முதல்வரும், பிரதமரும், மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். என்று மிக மிக கீழ்த்தரமாக, நாட்டின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

சாமான்யன் எழுப்பிய கேள்விகள்!
•மத்திய அரசுக்கு 1500 கோடி வழங்கியது மட்டுமில்லாமல், 8 கோடி மதிப்புடைய மருத்துவ உபகரணங்களை தமிழக அரசிற்கு வழங்கிய டாடா குழுமம் கூட இவ்வாறு நினைக்கவில்லை.
•ஸ்டெர்லைட் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு 100 கோடி ரூபாயையும், தமிழக அரசிற்கு 5 கோடி ரூபாயையும் வழங்கிய அவர்கள் கூட இவ்வாறு நினைக்கவில்லை
• தமிழ்நாட்டிலேயே முதல் பணக்காரர் என்ற பெருமைக்குரிய நீங்கள் அள்ளி வழங்காமல், கிள்ளி வழங்கி இருப்பது ஏன்?
•தன்னால் இயன்ற, நிதியை வழங்கியவர்கள், மட்டுமில்லாமல் தன் சேமிப்பில், இருந்த உண்டியல் பணத்தை வழங்கிய, குழந்தைகள் கூட இவ்வாறு நினைக்கவில்லை.
•பிரதமரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ள, நீங்கள் அதே பிரதமரிடம் தான் உங்கள் தொகுதி மக்களுக்கு, தேவையானவற்றை கேட்க வேண்டும் என்பதை ஏன்? மறந்து விட்டிர்கள்.
•சமூகத்தை சீரழிக்கும் சீரியல் மூலம் கொள்ளை லாபம் பார்க்கும் சன்குழுமம், தனிப்பட்ட முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏன்? நன்கொடை வழங்கவில்லை.
•தங்கள் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி அதன் மூலம் சன்குழுமம், விளம்பரம் தேடியிருப்பது கேவலமானது, அவமானகரமானது ஆகும்.
• சில மளிகை பொருட்களை வழங்கி விட்டு, மக்களை பிச்சைக்கார்கள் என்று கூறியிருப்பதன் மூலம்  உங்களின் பணக்காரர் திமிரை காட்டியுள்ளீர்கள்.
•உணவில் டாடா உப்பை சேர்த்துகொள்பவர்கள் இவர்களின் உண்மை முகத்தை உணர வேண்டும் என்று சாமான்யன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

டாம் அண்ட் ஜெர்ரி பாப்பாய் இயக்குநர் ஜீன் டெய்ச் மரணம்!

April 20 2020 , Written by lankatime

டாம் அண்ட் ஜெர்ரி பாப்பாய் இயக்குநர் ஜீன் டெய்ச் மரணம்!

உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள ‘டாம் அண்ட் ஜெர்ரி’, ‘பாப்பாய்’ போன்ற பிரபல கார்ட்டூன் தொடர்களின் இயக்குநர் ஜீன் டெய்ச் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 95.

குட்டி எலியின் சேட்டைகளும், அதைத் துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகளும் நிறைந்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கதைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையும் விரும்பி ரசிக்க வைத்த இந்த கார்ட்டூன் தொடர் 1940ஆம் ஆண்டு வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசஃப் பார்பெரா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

1940 முதல் 1958ஆம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் இணைந்து ‘டாம் அண்ட் ஜெர்ரி’ தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கதைகளை இயக்கியவர் தான் ஜீன் டெய்ச். இவர் தனது ஆரம்பக் காலத்தில் ராணுவ வீரராகவும், அதைத் தொடர்ந்து வட அமெரிக்காவில் விமானியாகவும் பணியாற்றி வந்தார். 1944ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் வேலையிலிருந்து விலகிய ஜீன் டெய்ச், கார்ட்டூன் சித்திரங்களை வரைய தொடங்கினார். கார்ட்டூன் ஓவியங்கள், கதைகள், தொடர்கள் எனத் தனது சிறப்பான படைப்புகளுக்காக ஆஸ்கர் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

1960 ஆண்டின் தொடக்கத்தில் இவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மற்றும் ‘பாப்பாய்’ கார்ட்டூன் தொடர்கள் உலகம் முழுவதும் ஏராளமான மக்களை ரசிக்க வைத்தது. டாம் அண்ட் ஜெர்ரி தொடரில் 13 கதைகள் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. ‘சத்தான கீரை உண்டால் சக்தி கிடைக்கும்’ என்ற கருத்தைச் சிறு குழந்தைகளின் ஆழ்மனத்தில் பதிய வைத்த ‘பாப்பாய்’ தொடரிலும் சில பகுதிகளை இவர் இயக்கியுள்ளார்.

வயது முதிர்ச்சி காரணமான உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 16) ப்ராக் நாட்டில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டில் வைத்து மரணமடைந்தார். ’மன்றோ’ என்னும் பிரபல கார்ட்டூன் குறும்படத்திற்காக ஜீன் டெய்ச் ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணத்துக்குப் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more

தப்லிக் மாநாட்டால் கடலூரில் சமூக பரவலாக மாறும் கொரோனா?

April 20 2020 , Written by lankatime

தப்லிக் மாநாட்டால் கடலூரில் சமூக பரவலாக மாறும் கொரோனா?

மத்திய மாநில அரசுகள் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தொற்று குறித்த உண்மையை மறைத்து இருப்பதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை செய்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுபடுத்த முடியும் என்பதை உணர்வோம்

டெல்லி தப்லிக் மாநாடு சென்ற பிரிதிநிதிகளின் செயல்பாடுகள் அவர்களின் குடும்பத்தை பதம் பார்த்து வருகிறது என்பதை கூட உணராமல் அலட்சியமகா நடமாடுவது எதை விதைக்க என்பது அவர்களுக்கே வெளிச்சம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் கொரோனா பாதிப்பு 20 லிருந்து 26 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தொற்று கடலூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு 20 இருந்தது.

அதில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.அதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிட்சை அழிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் மேலும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் குரானா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் வெளிவந்த பரிசோதனை முடிவுகளின் படி 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவரின் 2 வயது பெண் குழந்தைக்கும், இதுபோல் சிதம்பரத்தில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவரின் 6 வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவரின் 58 வயது மனைவிக்கும் 31 மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின் படி பண்ருட்டியில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவரின் 40 வயது மனைவிக்கும் 10 வயது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இடங்கள் அனைத்தையும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

அப்பகுதியை சேர்ந்த அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ப்பட உள்ளது.


நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 26 நபர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது இவர்களில் 17 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதர 9 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தப்லிக் மாநாடு கடலூர் மாவட்ட நிர்வாகத்தை முடக்கிவிட்டது காரணம் டெல்லி தப்லிக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும்

எதாவது ஒரு அரசியல் கட்சி பலத்துடன் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்ணில் மண்ணை தூவி மறைந்து இருந்து வருகின்றனர் இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா கொல்லை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் விலக வில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உணரவேண்டும்.

Read more

Facebook - ல் தொடரும் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகள், கண்டுகொள்ளாத நிர்வாகம், வலுக்கும் கண்டனம்!

April 20 2020 , Written by lankatime

Facebook - ல் தொடரும் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தும் பதிவுகள், கண்டுகொள்ளாத நிர்வாகம், வலுக்கும் கண்டனம்!

சீதா தேவி மற்றும் பகவான் சிவன் ஆகிய இந்து தெய்வங்களைப் பற்றி கீழ்த்தரமாக சொல்லமுடியாத அளவிற்கு அவதூறுகளைத் தூண்டி வருகின்றனர் சிலர். ஆனால் பேஸ்புக்கின் "சமூக தரநிலைக் குழு" இதுபோன்ற பதிவுகளை நீக்குவதோ கண்டிப்பதோ இல்லை.


பர்பானியில் வசிக்கும் அப்துல் வாஹித், இந்து ஆர்வலரால் பதிவு செய்யப்பட்ட எஃ.ப்.ஐ.ஆரை அடுத்து உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சல்மான் கான் ரசிகராகத் தன்னை முகநூலில் அடையாள படுத்திக்கொண்டுள்ளார், சில ஸ்கிரீன் ஷாட்கள் இங்கே. அவரது பதிவு, சீதா தேவி, பார்வதி தேவி, மற்றும் துர்கா தேவி ஹிந்து தெய்வங்களை எதிரான மிகவும் மோசமான கருத்துக்களால் நிரம்பியுள்ளது.

ஒரு FB பயனர் வாஹித்தின் தாக்குதல் புகைப்படத்தைப் புகாரளித்தபோது, அதை பேஸ்புக்கின் சமூக தரநிலை பார்வையாளர்கள் 'சரி' என்றும் தங்களுடைய விதிகளை மீறவில்லை என கூறியுள்ளனர். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற சமூகங்களுக்கு எதிராகவோ, சில அரசியல் காட்சிகளுக்கு எதிராக எழுதினால், பேஸ்புக் கணக்கு 30 நாட்களுக்கு செயலிழக்கப்படலாம். ஆனால் ஹிந்து கடவுள்களுக்கு அது பொருந்தாது.

Facebook நிறுவனம் இந்துக்கள் மீதும் அவர்களின் நம்பிக்கை மீதும் ஏன் அலட்சியமாக இருக்கிறது? இந்துக்கள் Facebook ன் தளத்திற்கான மிகப்பெரிய பயனர் தளங்களில் ஒன்றாகும், ஆனால் அவர் இந்துக்கள், அவர்களின் நம்பிக்கை மற்றும் தெய்வங்கள் மீது சிறப்பு வெறுப்பைக் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது.

Read more

இலங்கை கொரோனா ஒழிப்பை சிறப்பாக கையாளும் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

April 20 2020 , Written by lankatime

இலங்கை கொரோனா ஒழிப்பை சிறப்பாக கையாளும் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

இலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றினை தடுபபதில் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளவதுடன், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அந்த அமைப்பின் ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சிம்றின் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பேசிய அவர்,

இலங்கையில்  ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தல், தொழில் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சுகாதார நிலையை உரிய முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கதுடன், மகிழ்ச்சிக்குரியதாகவும் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை  அரசாங்கம் நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன திருமதி விம்றின்சிங்கிற்கு விடயங்களை தெளிவுபடுத்தினார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் ஸ்ரீலங்காப் பிரஜைகளின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் இதன் போது இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறுகி காலம் மற்றும் நீண்டகால ரீதியில் நாட்டின் தொழிலாளர்களை உள்ளடக்கிய துறைக்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கான இந்நாட்டின் பிரதிநிதி அமைச்சரிடம் இதன் போது உறுதியளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Read more

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 40 ஆயிரம் பேர் பலி - மிரண்டு போன அமெரிக்கா!

April 20 2020 , Written by lankatime

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 40 ஆயிரம் பேர் பலி - மிரண்டு போன அமெரிக்கா!

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா கொரோனாவின் கோரப்படியில் சிக்கியுள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 13 ஆயிரத்து 556 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், தற்போதைய நிலவரப்படி, வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் 40 ஆயிரத்து 223 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதால் அமெரிக்க மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேருக்கு கொரோனா தொற்று - 40 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

April 19 2020 , Written by lankatime

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேருக்கு கொரோனா தொற்று - 40 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

அமெரிக்காவில், ஒரே நாளில் 33,400 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,849 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 40 ஆயிரத்தை நெருங்குகிறது.

உலகளவில் கொரோனாவுக்கு அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அந்நாட்டில், 739,923 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,015 பேர் உயிரிழந்துள்ளனர். 68, 285 பேர் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஒரு நாளில், அமெரிக்காவில் 33,494 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,849 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read more
<< < 1 2 3 4 5 > >>