Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கொரோனா பலி அதிகரிப்பு எதிரொலி; அமெரிக்கா-கனடா எல்லைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடல் - இரு நாடுகளும் அறிவிப்பு!

April 19 2020 , Written by lankatime

கொரோனா பலி அதிகரிப்பு எதிரொலி; அமெரிக்கா-கனடா எல்லைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடல் - இரு நாடுகளும் அறிவிப்பு!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அழித்துக் கொண்டிருக்கிறது. நாள் தோறும் சுமார் 7,000 பேர் பலியாகின்றனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் அமெரிக்காவில் தான் கொரோனா  பாதிப்பு படுபயங்கரமாக உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,867 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 39,014 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738,792 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இருநாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி  எல்லைப் பகுதி சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அத்தியாவசியமான போக்குவரத்திற்கு மட்டும் சாலைகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு  நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

மகன், மகள், பேரன் பேத்திகள் உட்பட 1,100 க்கு பேருக்கு கொரோனாவை பரப்பிய பாகிஸ்தான் தப்லி ஜமாத் தலைவர் மரணம்.!

April 19 2020 , Written by lankatime

 மகன், மகள், பேரன் பேத்திகள் உட்பட 1,100 க்கு பேருக்கு கொரோனாவை பரப்பிய பாகிஸ்தான் தப்லி ஜமாத் தலைவர் மரணம்.!

பாகிஸ்தான் பைசாபாத்தை சேர்ந்த தப்லி ஜமாஅத் பிரிவின் மூத்த தலைவர் மற்றும் பிரச்சாரகர் மவுலானா சாஹிப் ரூமி. இவர் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி சென்ற வியாழக்கிழமை உயிர் இழந்ததாக பைசாபாத் உதவி கமிஷனர் முஹம்மது அலி நேற்று தகவல் தெரிவித்தார்.


மவுலானா சாஹிப் ரூமி லாகூரில் ரேய் வைந்து பகுதியில் நடைபெற்ற சமய பிரச்சாரத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதில் சிலர் வெளி நாட்டவர்களும் இருந்தனர். அப்போது பல பேருக்கு கொரோனா பரவியதை அவர்கள் அறியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியதை அடுத்து பிரச்சாரக் கூட்டம் பாதியில் முடிந்தது. அதன் பிறகு பைசாபாத்தில் உள்ள வீட்டுக்குத் திரும்பிய அவர் வழக்கம் போல தனது மகன் ,மகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் கூடி பழகியுள்ளார்.
   
இந்த நிலையில் தாமதமாக உஷாரான பாகிஸ்தான் அரசு இவரைப் பிடித்து சோதனை செய்ததில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததும், இவரால் இவரது பேரன்மார்கள் இருவர் உட்பட 5 குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து பைசாபாத்தில் இவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலனில்லாமல் மவுலானா சாஹிப் ரூமி சென்ற வியாழக்கிழமை இறந்தார


இந்த நிலையில் மவுலானா சாஹிப் ரூமியின் பிரச்சாரக் கூட்டத்தால் லாகூரில் ஏற்பட்ட தொற்று ஒருவர்பின் ஒருவராக ஏறக்குறைய 1,100 பேருக்கு ஏற்பட்டு இன்று அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றும் துணை கமிஷனர் கூறியுள்ளார்.


பாகிஸ்தானில் இது வரை 7,480 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 143 பேர் இதுவரை இறந்து விட்டார்கள் என்றும், இவர்களில் 1,100 பேர் தப்லி ஜமாஅத் உறுப்பினர்கள் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

Read more
<< < 1 2 3 4 5