2-ம் உலகப் போர்: பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜப்பான் பிரதமர்!
Published on August 16 2015
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் நடந்து கொண்ட விதத்திற்காக, அந்நாட்டு பிரதமர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். உலகத்தையே மிரள வைத்த 2-ம் உலகப் போர் நிறைவடைந்து 70 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவம், போரில் நடத்திய அத்துமீறல்களுக்காக, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தற்போதும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கூறியதாவது:-
இரண்டாம் உலகப் போர் பல துயரங்களைதான் விட்டுச் சென்றுள்ளது. இரண்டாம் உலகப் போர் உலக நாட்டிற்கு எல்லாம் ஒரு படிப்பினை ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் ராணுவ வீரர்கள் நடந்து கொண்ட விதத்திற்காக, தற்போது திரும்பத்திரும்ப மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். போரில் பலியானோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். போர் முடிந்த போதும், இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்துக்கு எங்களை நாங்கள் முழுமையாக அர்ப்பணித்துள்ளோம். இனி வரும் காலங்களில் அதில் இருந்து தவறமாட்டோம். இந்த விவகாரத்தில், எதிர்கால சந்ததிகள், வரும் காலத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை இருக்காது என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
