பொதுத் தேர்தல் - 375 பேர் கைது!

Published on August 6 2015

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 882 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானாவை சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் தொடர்பானவை என்று செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். இதன்படி சட்டவிரோத சுவரொட்டிகள், பதாதைகள் தொடர்பில் 190 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நியமனம் மற்றும் பதவி உயர்வுகள் குறித்து 166 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டவிரோத கூட்டங்கள் தொடர்பில் 117 முறைப்பாடுகளும், தேர்தல் விதிமுறைகள் மீறிய சம்பங்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளாதகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். இதற்கிடையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரையில் 375 பேர் கைது செய்யப்பட்;டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தல் - 375 பேர் கைது!

Written by Lanka

Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post