கொழும்பு டெஸ்ட்: இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்கு- 2-வது இன்னிங்சில் இந்தியா 325-ல் டிக்ளேர்! (படங்கள் இணைப்பு)

Published on August 23 2015

கொழும்பு டெஸ்ட்: இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்கு- 2-வது இன்னிங்சில் இந்தியா 325-ல் டிக்ளேர்! (படங்கள் இணைப்பு) கொழும்பு டெஸ்ட்: இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்கு- 2-வது இன்னிங்சில் இந்தியா 325-ல் டிக்ளேர்! (படங்கள் இணைப்பு)
கொழும்பு டெஸ்ட்: இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்கு- 2-வது இன்னிங்சில் இந்தியா 325-ல் டிக்ளேர்! (படங்கள் இணைப்பு)

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராகுல் (108), கோலி (78), ரோகித் சர்மா (79), சகா (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 393 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் ஹெராத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரசாத், மேத்யூஸ், சமீரா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை விளையாடியது. மிஸ்ராவின் அபார பந்து வீச்சால் அந்த அணி 306 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 102 ரன்கள் எடுத்தார். மிஸ்ரா நான்கு விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 87 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் 39 ரன்களுடனும், ரகானே 28 ரன்களும் களத்தில் இருந்தனர். இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். முரளி விஜய் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 10 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரகானே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடித்த ரகானே 126 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐந்து ரன்னில் சகா ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேற, பென்னி 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை முடித்துக்கொண்டது. இதனால் இந்தியா இலங்கையை விட 412 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

Written by lankatime

Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post