இம் முறை பருவகால நெற்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 6000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மத்தல விமான நிலையம் உட்பட நெற்களை கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதும் 170 களஞ்சியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.