நாட்டை ஆட்சி செய்வது ஐக்கிய தேசிய கட்சியல்ல :
Published on September 22 2015
நாட்டை ஆட்சி செய்வது ஐக்கிய தேசிய கட்சியல்ல என்பதை ஐ. தே. க. ஆதரவாளர்கள் மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதியமைச்சர் அனுராத ஜயரட்ண தெரிவித்துள்ளார். நாட்டை ஆட்சி செய்வது ஐக்கிய தேசிய கட்சியல்ல என்பதை ஐ. தே. க. ஆதரவாளர்கள் மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மஹாவலி பிரதியமைச்சர் அனுராத ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
கம்பளை நகரில் நேற்று பிற்பகல் மஹாவலி பிரதியமைச்சருக்கான வரவேற்பு இடம்பெற்றது. இதில் பிரதியமைச்சர் அனுராத ஜயரட்ண நுவரெலியா வீதியில் இருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு நாவலப்பிட்டி வீதி வரை அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து கம்பளை பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நான் ஆரம்பத்தில் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். எனினும் என்னை தெரிவு செய்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய தேவை இருக்கும் நிலையில் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டமையால் இப்பதவியைப் பொறுப்பேற்றேன். எனவே இந்த அமைச்சுப் பதவி மக்களுக்கானதாகும். இதன் மூலம் மக்களுக்கு பணியாற்றுவதில் பின்நிற்க மாட்டேன். நாட்டை ஐக்கிய தேசிய கட்சி மட்டும் ஆட்சி செய்யவில்லை.
இந்த அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றால் அமைக்கப்பட்டுள்ளதாகும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நாட்டில் ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஐக்கிய தேசிய கட்சி தான் ஆட்சியை நடாத்துகின்றது என்பது அர்த்தமாகாது. அரசாங்கம் கட்சி அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்றுவதில்லை என்றார். இதில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ண மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிசங்க ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
