கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கி ஆயுதங்களை பறித்து செல்ல முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் முயற்சி!
Published on February 5 2017
கிளிநொச்சியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை தாக்கி ஆயுதங்களை பறித்து செல்ல புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வந்த திட்டம் ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல முறை இந்த தாக்குதலை நடத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
புலிகளை மீளுருவாக்க முயற்சித்து வரும் இந்த நபர்கள் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் புதைத்துள்ள ஆயுதங்களை தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இதில் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவர்கள் இரவு நேரத்தில் எவ்வித தடைகளும் இன்றி ஆயுதங்களை தோண்டி எடுக்கும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தேசிய பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் என பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் வவுனியாவில் ஓரிடத்தில் நடத்த மோதலில் புலிகளை மீளுவாக்க முயற்சித்த கோபி உட்பட சிலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
