முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, விமல் வீரவன்ச உயிருக்கு ஆபத்து : டலஸ் அழகப்பெரும!
Published on March 4 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் விடயங்களை அவதானிக்கையில் நாட்டில் மீண்டும் பாதாள உலக கோஷ்டியினரை ஊக்குவிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அல்லது தலைவர்களால் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றார். அவரது பாதுகாப்பை குறைத்துள்ளனர். பொலிஸ் சீருடையில் சுமார் 20 பேர் ஆயுதங்களுடன் புறப்பட்டால் அவரது உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது. எமக்கு அந்த சந்தேகம் காணப்படுகின்றது.
விமல் வீரவன்ச சிறையில் இருக்கின்றார். அதே சிறைச்சாலையில் பாதாள உலக கோஷ்டியினரை ஊக்குவிப்பதற்கு நிதியுதவி அளித்தவர்களும் இருக்கின்றனர். விமலை பஸ்ஸிலேயே நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம்? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் பாதுகாப்பையும் குறைத்துள்ளனர். இவ்வாறான பாதாள உலக கோஷ்டியினரிடமிருந்த அவரை எவ்வாறு பாதுகாப்பது? அந்த உத்தரவாதத்தை வழங்குவது யார்?“ எனக் குறிப்பிட்டார்.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
