கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது!¨(photos)

Published on August 29 2015

கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது!¨(photos)கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது!¨(photos)கைவிடப்பட்ட லாரிக்குள் 71 பிணங்கள்: ஹங்கேரி நாட்டில் 3 பேர் கைது!¨(photos)

ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த ஒரு லாரிக்குள் 71 பேர் மூச்சுமுட்டி பலியாக காரணமாக இருந்த மூன்று பேரை ஹங்கேரி நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமையில் இருந்து அந்த சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியில் இருந்து கெட்டவாடை வீசியதால் சந்தேகம் அடைந்த ஆஸ்திரியா நாட்டு போலீசார், நேற்று அந்த லாரியின் மூடிய கதவை உடைத்து திறந்துப் பார்த்தபோது உள்ளே இருந்த 71 பிரேதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டன. கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் முயற்சியில், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க இந்த லாரியை கைவிட்டு தப்பிச்சென்ற உரிமையாளர்களை இருநாட்டு போலீசாரும் தேடி வந்தனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரியாவில் குடியேறும் ஆசையுடன் வந்தவர்களை பணத்துக்கு ஆசைப்பட்டு லாரிக்குள் போட்டு அடைத்து, அழைத்துவந்து, போலீஸ் பயத்தால் அந்த லாரியை நெடுஞ்சாலையில் அனாதையாக விட்டுவிட்டு தப்பியோடிய மூன்று பேரை ஹங்கேரி நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், சர்வதேச ஆள்கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கும் முயற்சியின் முதல்படியாக இந்த விசாரணை அமைந்துள்ளதாக ஆஸ்திரியா நாட்டு போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Written by lankatime

Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post