ஏ9 வீதியின் ஓமந்தைச் சோதனை சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் அகற்றப்பட்டது!(photos)
Published on August 29 2015
ஏ9 வீதியின் ஓமந்தைச் சோதனை சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஓமந்தையின் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை பொருள்களுடன் வரும் வாகனங்கள் அவற்றை சோதனைக்குட்படுத்தும் இடமாகவும் ஓமந்தை சோதனைச் சாவடி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
/image%2F1796264%2F20150829%2Fob_9fd622_omanthai-checkpoint-4.jpg)
/image%2F1796264%2F20150829%2Fob_25211a_omanthai-checkpoint-3.jpg)
/image%2F1796264%2F20150829%2Fob_512547_omanthai-checkpoint-5.jpg)
/image%2F1796264%2F20150829%2Fob_935cad_omanthai-checkpoint-2.jpg)
/image%2F1796264%2F20150829%2Fob_a13cc2_32079914.jpg)
/image%2F1796264%2F20150829%2Fob_83b4e4_omanthai-checkpoint-2.jpg)