மாலி நாட்டின் தலைநகரான பமோக்கோவில் உள்ள பிரபல பாபிலோஸ் ஓட்டலுக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டுக்கு 12 பேர் பலியாகினர், அங்கிருந்த ஐந்து வெளிநாட்டினர் உள்பட சிலரை தீவிரவாதிகள் சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைபிடிக்கப்பட்டவர்களில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மூவரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டலின் உள்ளே பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன் மாலி ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. மாலியில் தலைதூக்கிவரும் தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. அமைதிப்படையினர் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து அங்கே முகாமிட்டுள்ளனர். அவர்களில் 30 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertising
Related posts
Six Sri Lankans knifed to death in Ottawa; 19-year old arrested
India Agrees to Withdraw Troops from Maldives, To End Military Presence Completely by May
Central Hall of old Parliament building will be known as 'Samvidhan Sadan': Rajya Sabha Chairman
G20 Summit 2023: Delhi Traffic Police Issues Weekend Advisory, Movement On These Roads To Remain Restricted; Details
India: Each one of us is an equal citizen, has equal opportunity, rights, duties, in this land: President Murmu on eve of 77th Independence Day
Ensure life of respect, dignity to Tamil community in Lanka: Modi to Wickremesinghe
Advertising
Advertising