நடிகர் சங்க தேர்தலில் அதிமுக.,வைச் சேர்ந்த நடிகர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக.,வைச் சேர்ந்த நடிகர்கள் சரத்குமார் மற்றும் விஷால் என அணியிலும் உள்ளனர். இவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதிமுக.,வைச் சேர்ந்த நடிகர்கள் போட்டியிடா கூடாது. அதே சமயம், அவர்கள் விருப்பப்படுவோருக்கு ஓட்டளிக்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.