Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

ஒரே நாள்; ஒரே மருத்துவமனை... காதல் ஜோடி திருமணம்!!

April 28 2019 , Written by lankatime

ஒரே நாள்; ஒரே மருத்துவமனை... காதல் ஜோடி திருமணம்!!

இங்கிலாந்தில் 26 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனை ஒன்றில், ஒரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகள், காதலர்களாகி தற்போது திருமணத்தில் இணைந்துள்ளது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.லண்டனில் உள்ள விகான் மருத்துவமனையில் 1992 டிச., 22ல் ்ஒரே நாளில் சிறு இடைவேளையில், ஆண், பெண் என இரு குழந்தைகள் பிறந்தன. ஷவுனா கிரேஸி மற்றும் டாம் மாகிர் என்ற பெயரில் வளர்ந்து வந்த இக்குழந்தைகள் 18 ஆண்டுகளுக்கு பின், 2010ல் 18 வயதில் ஒரு விழாவில் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டனர்.

ஷவுனா கிரேஸியை பார்த்தவுடன் டாம் மாகிருக்குள் ஏதோ ஒரு துறுதுறுப்பு. ஷவுனாவிடம் பேச முயன்றார். ஆனால், ஷவுனா அவரிடம் பேச விரும்பவில்லை. தொடர்ந்து டாம் பேச முயன்ற போதெல்லாம் அதை தவிர்த்து வந்துள்ளார்.பல கட்ட முயற்சிகளுக்குப் பின், ஒருவழியாக டாமின் காதலை ஏற்றுக் கொண்டார் ஷவுனா. இதன்பின்னரே, இருவரும் ஒரு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் என்பதை அறிந்தனர்.

தங்கள் காதல் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்த இந்த இளம் காதலர்கள். தற்போது, தங்களது 26வது வயதில் மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post