நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய மத்ரசா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்யவதே நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளை, கல்வியமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றின் கீழ் கொண்டுவருவது பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வை மாத்திரமே வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்லாமிய மற்றும் அரபு கற்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்ட மத்ரசா பாடசாலைகள் அனைத்தும் நாடுதழுவிய ரீதியில் சட்ட விரோதமான முறையிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.