எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமராக பதவியேற்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்பட்டுள்ளது
இன்று பிற்பகல் 1 மணிக்கு குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதோடு, பிற்பகல் 3 மணிக்கு அவர் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.