பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
செவோய் திரையரங்குக்கு அருகில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது
கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றினை படையினர் வெடிக்கச் செய்து அழித்துள்ளனர்.
காவல் துறை விசேட அதிரடிப்படையினர் (S.T.F) குறித்த பொதியினை வெடிக்க வைத்துள்ளனர் என கட்டான காவல் துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றிய பின்னரே அந்த பொதி வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ளவத்தை - சவோய் திரையரங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியொன்றை பரிசோதிப்பதற்காக அதன் ஆசனம் படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்று குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து அதனை படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது அதன் ஆசனத்தை திறப்பதற்காக வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இல்லை எனவும் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் எட்டு இடங்களில் கடந்த 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை அவர் மேலும் குறிப்பிட்டார்.