அரச நிறுவனங்கள் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்யவதை நிறுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!.
துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள். இதனை வாங்குபவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நுகேகொடயில் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம் இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம் என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை 'உங்களுக்கு தற்போது ஓய்வு முடியாது, மீண்டும் நீங்கள் வரவேண்டும்" என சொன்னது நீங்கள் தான்.
ஆனால் ஓய்வு பெறச் சென்ற என்றை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிபால தான் என்பதை அவரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகின்றார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக பெற்று கொண்ட யுத்த வெற்றியை காட்டிகொடுக்க ஆயத்தமாக உள்ளார்கள். இந்த வரலாற்று யுத்த வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடம், தலைவரிடமும் உள்ளது. எனவே காட்டி கொடுப்புக்கான புதிய அரசியலமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டுதான் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வேண்டுமென்றே என்னுடைய சுயநலத்துக்காக தோல்வியடைந்ததாக கூறுகின்றார்கள். நான் சர்வதேச நாடுகளிடம் கடன் பெற்று நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடவை எதிர்கொண்டதால் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால், எதற்காக நாடு கடனில் இருக்கும் போது ஆட்சிக்கு வந்தீர்கள். தற்போதைய தலைவர்கள் இதுபோன்ற விளக்கமற்ற கதைகளை தான் கூறிகொண்டு இருக்கின்றார்கள்.
அரசாங்க நிறுவனங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள். இதுபோன்று கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலபரப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
இதுபோன்று அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும், வங்கியில் ஒரு பகுதியையும் கொள்வனவு செய்ய உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய அனைத்தும் பொதுமக்களின் உடமையாக்கப்படும் என்பது நிச்சயம் என்றார்.
சொந்தக் கட்சியையே தோற்கடித்த அற்புதத் தலைவர் மைத்திரி : பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்!
தனது சொந்தக்கட்சியையே தோற்கடிக்கச்செய்த மிக அற்புதமான அரச தலைவர் என்ற பெயரை பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகச் சிறந்த இடத்தை பிடிப்பார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது கட்சியை தாமே தோற்கடிக்கச் செய்த மிக அற்புதமாக அரச தலைவர் என்ற பெயரை பெற்று விடுவார் என அவர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக, அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ யுகத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும் என ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஒருசிலர் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கையை ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.
ரணிலின் அரசாங்கம் மத்திய வங்கியில் களவாடியுள்ளது: தினேஸ் குணவர்தன!
எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், இதுவரையில் மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, எனினும் ரணிலின் அரசாங்கம் மத்திய வங்கியில் களவாடியுள்ளது.
சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் ஜனாதிபதி எப்போதும் மஹிந்த ராஜபக்ச மட்டுமேயாகும்.
அரசாங்கத்தின் ஒவ்வொரு காய்களாக வெட்டி வீழ்த்தப்படுவதாகவும் இன்னும் சில காய்களே எஞ்சியிருப்பதாகவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை சட்டத்திற்கு பதிலாக நவீனசட்டம்?
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை சட்டத்திற்கு பதிலாக நவீன உலகத்திற்கு ஏற்றவாறு புதிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய தேசிய பாதுகாப்பு சபையின் பிரதானிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அமுலில் இருந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு விசாரணை சட்டமே இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.
பிரித்தானியா தனது முந்தைய சட்டத்தை முற்றாக நீக்கி விட்டு தற்போதைய முன்னேறிய சமூகத்திற்கு பொருத்தமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
நவீன தொழிற்நுட்ப முன்னேற்றத்தை எதிர்கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கி அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு பிரிவின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கோட்டாபய அரசியலுக்கு வர சரத் பொன்சேகா விருப்பம் தெரிவிப்பு!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அரசியலுக்கு வருவதற்கு சரத் பொன்சேகா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தக் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அது மட்டும் அல்ல ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றுவதில் தற்போது முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றனர்.
கூட்டு எதிர் கட்சியினால் உருவாக்கப்பட்டுள்ள “பொது ஜன பெரமுன”வின் முதலாவது கூட்டம் நேற்று புரட்சியின் ஆரம்பம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.மேற்கண்டவாறு அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.
துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்யவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: ஹிந்த ராஜபக்ஷ!.
துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள். இதனை வாங்குபவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நுகேகொடயில் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம் இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம் என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை 'உங்களுக்கு தற்போது ஓய்வு முடியாது, மீண்டும் நீங்கள் வரவேண்டும்" என சொன்னது நீங்கள் தான்.
ஆனால் ஓய்வு பெறச் சென்ற என்றை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிபால தான் என்பதை அவரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகின்றார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக பெற்று கொண்ட யுத்த வெற்றியை காட்டிகொடுக்க ஆயத்தமாக உள்ளார்கள். இந்த வரலாற்று யுத்த வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடம், தலைவரிடமும் உள்ளது. எனவே காட்டி கொடுப்புக்கான புதிய அரசியலமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டுதான் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வேண்டுமென்றே என்னுடைய சுயநலத்துக்காக தோல்வியடைந்ததாக கூறுகின்றார்கள். நான் சர்வதேச நாடுகளிடம் கடன் பெற்று நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடவை எதிர்கொண்டதால் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால், எதற்காக நாடு கடனில் இருக்கும் போது ஆட்சிக்கு வந்தீர்கள். தற்போதைய தலைவர்கள் இதுபோன்ற விளக்கமற்ற கதைகளை தான் கூறிகொண்டு இருக்கின்றார்கள்.
அரசாங்க நிறுவனங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள். இதுபோன்று கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலபரப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
இதுபோன்று அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும், வங்கியில் ஒரு பகுதியையும் கொள்வனவு செய்ய உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய அனைத்தும் பொதுமக்களின் உடமையாக்கப்படும் என்பது நிச்சயம் என்றார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத 300 புலி உறுப்பினர்கள் வடக்கில்!
வடக்கில் புனர்வாழ்வு அளிக்கப்படாத 300 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது படையினரிடம் சரணடையாத சுமார் 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் இருக்கின்றார்கள். இந்த புலி உறுப்பினர்கள் ஐரோப்பிய புலம்பெயர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர் என வடக்கு இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னதாகவும் வடக்கில் குற்றச் செயல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் புலிகளின் புனர்வாழ்வுக்கு உட்படாத முன்னாள் புலி போராளிகள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக : இதுவரை மூவர் பலி!
நீண்ட வறட்சியான காலநிலையின் பின்னர் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக நீரில் மூழ்கியும், வேகமான காற்றினால் ஏற்பட்ட விபத்துக்களினாலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, மன்முனை வடக்கு பிரதேசத்தில் இருவர் நீரில் மூழ்கியும், யாழ்ப்பாணத்தில் வேகமாக வீசிய காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதிக காற்றின் காரணமாக 4 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 106 வீடுகளுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பொங்கமுவ தேரர், சத்தாதிஸ்ஸ தேரர் உட்பட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு!
கொழும்பில் கடந்த நவம்பர் 7 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் பிரதிவாதிகளாக தெரிவிக்கப்பட்டிருந்த பொங்கமுவே நாலக்க தேரர் உட்பட ஏழுபேரை விடுவிக்க கோட்டை மஜிஸ்ட்ரேட் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த பொங்கமுவ நாலக்க தேரர், ராவண பலய அமைச்சின் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட ஏழு பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.