புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஐ.நா அங்கீகாரம் : மங்களவுக்கு சிங்கள ஊடகம் பதிலடி!
புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை அங்கீகரித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர். புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்துள்ளது என சிங்கள நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் கனவு அமைப்பு எனவும் அதனை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிற்பகலில் பேரணியில் முற்பகலில் நாடாளுமன்றில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்ததுடன் உரையொன்றையும் ஆற்றியுள்ளார்.
எனினும் இன்று பிற்பகல் கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொட பேரணி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள நிலையில் முற்பகல் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
அத்துடன் சிறிய உரையொன்றையும் மஹிந்த ஆற்றியுள்ளார்.
மஹிந்தவின் கூட்டத்திற்கு எதிராக ரணிலும் தமது பலத்தை காட்டுவதற்கு அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் தொடர்கின்றனர் :மஹிந்த ராஜபக்ச!
நாரஹென்பிட்டி அபயாராமய விஹாரையின் பீடாதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரரின் 74ம் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் சில கேள்விகளை மஹிந்தவிடம் கேட்ட போது அவர் பதிலளித்திருந்தார்.
கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்கின்றனர்.
என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிப்போரே என்னிடம் வந்து கூறுகின்றார்கள் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாம் கூறியிருந்தோம்.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் ஊடாக கண்காணிக்கப்படுகின்றது.
அரசாங்கம் கடுமையாக அச்சமடைந்துள்ளது.
நாட்டில் தற்போது நிதி அமைச்சர் ஜனாதிபதியாகவும், ஜனாதிபதி நிதியமைச்சராகவும் செயற்படுகின்றார்கள்.
அராசங்கம் அர்ஜூன் அலோசியஸை பாதுகாத்து வருகின்றது என மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்கு சம்பந்தனுக்கு தகுதி இல்லை :டிலான் பெரேரா
மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தகுதி இல்லை என இராஜாங்க அமைச்சரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வா தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்களிலும் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுவருகிறது.
ஆனால், அவற்றுடன் தொடர்புடைய எவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, மேசடியில் ஈடுபட்ட ஒருவர் கூட குற்றவாளியாகவில்லை என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், இதுகுறித்து கருத்து வெளியிட சம்பந்தனுக்கு தகுதி இல்லை என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும்.
ஊழல், மோசடிகளில் அவர் தனிப்பட்ட ரீதியில் தொடர்பில்லாதவர். இருப்பினும், வங்கிக் கொள்ளைகள், கொலைகள் என்பவற்றுடன் அவரது கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளார்.
இதன்போதெல்லாம் அவர் அமைதியாகவே இருந்துவந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டில் இடம்பெற்ற ஏனைய மோசடிகள் தொடர்பில் பேசுவதற்குத் தகுதியே இல்லை என்று டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி!
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ஸ்டெலா ரணதுங்க ஆகியோருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி பிரசன்ன ரணதுங்க எதிர்வரும் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரையில் குவைத்துக்கு செல்வதற்கும், மொரின் ஸ்டெலா எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரையில் அவுஸ்திரேலியா செல்வதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கொலன்னாவ மீதொட்டுமுல்ல பிரதேச காணி ஒன்றை வழங்குவதாகக் கூறி வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா பணம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் பிரசன்ன ரணதுங்க, மொரின் ஸ்டெலா மற்றும் ஒரு நபருக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் போது பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென நீதிவதி அறிவித்துள்ளார்.
தற்காலிக அடிப்படையில் பிரசன்ன மற்றும் அவரது மனைவியின் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.
இது குறித்து குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுகேகொட பேரணியில் விமல் வீரவங்சவின் குரல்!
யாழ். பல்கலை பெண்கள் விடுதியில் பாரிய தீ!(படங்கள் இணைப்பு)
நரியாட்சியை நம்பி இனியும் மோசம் போக முஸ்லங்கள் தயாரில்லை: ஏ.ஓ.முஹர்ரிஸ்!
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முஸ்லிம் பிரிவின் முன்னால் அமைப்பாளர் ஏ.ஓ முஹர்றிஸ் அவர்களுடைய ஆதரவாளர்களுடன் பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்,
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த அரசு சிறுபான்மைமக்களின் எதுவித பிரச்சினைக்கும் தீர்வு வழங்கவில்லை, எனும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நல்லாட்சி எனும் பெயரில் செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தோம்.
ஆனால் அவை அனைத்தும் மஹிந்த அரசினை கவிழ்பதற்கான சதி என்று, கடந்த அரசில் நடந்தேரிய அலுத்தகம தர்காடவுன் இனக்களவரம், பள்ளிகள் மீதான தொடர் தாக்குதல்கள், நோலிமிட- பெசன் பக் போன்ற முஸ்லிங்களுக்கு சொந்தமான வியாபார நிறுவனங்கள் தீயிடப்பட்டமை, பொதுபலசேனா,சிங்கலே,சிங்கராவயமற்றும் ராவயபலய போன்றவற்றுக்கான சூத்திரதாரிகள் தற்போதய நல்லாட்சியின் வீ.வீ.ஐ.பி யாக சுதந்திரமாக உலாவுவதன் மூலமாக புலனாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிககையில்,
இனியும் இந்த நரியாட்சியை நம்பி மோசம் போகாமல் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு தூய்மையாகவும் விசுவாமாகவும் உழைத்து முப்பது வருடயுத்தத்தை முடித்து உண்மையான சுதந்திரக் காற்றை அனுபவிக்கச் செய்து முழுத்தேசத்தின் இறைமையையும் மீள கட்டியெழுப்பி சர்வதேசத்தில் அனைத்து பிரஜைகளையும் தலை நிமிரச் செய்தமுன்னால் சனாதிபதியின் கரத்தை பலப்படுத்திமீண்டும்.
ஆட்சிபீடமேற்ற அயராது உழைக்க போவதாக தெறிவித்துள்ளார். நுகேகொடையில் 27.01.2017 (நாளை)நடைபெறவுள்ள பொதுப் பேரணியல் இன்னும் பலமுக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் இனையவுள்ளதாகவும் இதன் பின்னர் நல்லாட்சி அரசில் பாரிய இடிகள் விழக்காத்திருக்கிறது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமைகுறிப்கிடத்தக்கது.
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட இந்திய, பாகிஸ்தான் பிரஜைகள் கைது!
உரிய பாஸ்போட் இன்றி நாட்டில் இருந்து வௌியேற முற்பட்ட வௌிநாட்டு பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான இருவரும் இந்திய மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
போலி பாஸ்போட்டைப் பயன்படுத்தி இந்தியப் பிரஜை இந்தியாவின் பெங்கலூருக்கும், பாகிஸ்தான் பிரஜை பிரான்சுக்கும் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுஇவ்வாறு இருக்க, மாத்தறை ரயில் நிலையத்தின் பொருட்களுக்கு தீயினால் சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்லோவேனியா பிரஜைகளான இவர்களை மாத்தறை பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.